உலக மக்கள் தொகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 800 கோடியைத் தொடும் என்றும் 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறது.
2023 ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது
மேலும், இது 2080-களில் உலக மக்கள் தொகை சுமார் 10.4 பில்லியனாக இருக்கும் என்றும் 2100 வரை இதே நிலையில் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.