
நியூயார்க்: சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அரசின் சில மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக ஐ.நா. அவையின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சவூதி அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் அவையின் உரிமைகள் அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
ஆனால், இந்த விசாரணை முடிவுகள் குறித்து சவூதி அரசாங்க தரப்பில் எந்த உடனடி எதிர்வினைகளும் வெளியாகவில்லை. அதேசமயத்தில், சவூதி அரசின் தரப்பில் 100 பக்க அறிக்கை ஏற்கனவே இதுகுறித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சவூதி பட்டத்து இளவரசர் மற்றும் அவருடைய தனிப்பட்ட சொத்துக்களின் மீது உலக நாடுகள் முன்வந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர், தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை இந்த நடவடிக்கைகளைத் தொடர வேண்டுமென நீதி விசாரணை செயல்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு பதிவாளர் ஆக்னஸ் காளமார்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.
[youtube-feed feed=1]