கொழும்பு

லங்கையின் முதல் செயற்கைக் கோளான ராவணா 1 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளின் செயற்கைக் கோள் ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இது வரை இலங்கை போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே செயற்கைக் கோள் இல்லாத நாடாக விளங்கின. ஆகையால் இத்தகைய நாடுகள் வேறு நாடுகளின் செயற்கைக் கோள்களை பயன்படுத்தி வந்தன. எனவே இலங்கை தங்கள் நாட்டுக்காக தனி செயற்கை கோளை செலுத்த முடிவு செய்தது.

ஜப்பான் நாட்டின் குயுஷு தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற இரு இலங்கை பொறியாளர்கள் திரிந்து தயரதே மற்றும் துலானி சாமிகா  இணைந்து இலங்கைக்கான செயற்கைக் கோளை வடிவமத்தனர். இந்த் செயற்கைக் கோள் ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அங்கிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று அமெரிக்காவுக்கு அனுப்பபட்டது.

ராவணா 1 என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக் கோள் நேற்று விண்ணில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உதவியுடன் ஏவப்பட்டது. தற்போது இந்த் செயற்கைக் கோள் பூமியின் இருந்து 400 கிமீ உயரத்தில் பூமியை சுற்றி வருகிறது. இந்த ராவண 1 செயற்கைக்கோள் 11.3 செமீ X 10 செமீ X அளவில் உள்ள சிறிய செயற்கைக் கோளாகும் இதன் எடை சுமார் 1.5 கிலோ ஆகும்.