கடும் நிதி நெருக்கடி காரணமாக வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் ஐ.நா தலைமை அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐ.நா சபையின் தலைமை அலுவலகம், வார இறுதியை முன்னிட்டு மூடப்படும் என்றும், இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் இயங்காது என்றும் ஐ.நா சபையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில், ”ஐ.நா சபையின் பட்ஜெட்டிற்கு தனது நிலுவைத் தொகையை உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளும் செலுத்தி விட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, சபையில் இந்தியா உட்பட 35 நாடுகள் மட்டுமே செலுத்தியிருப்பதாக கூறப்பட்டது. இதனால் ஐ.நா சபை கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஊழியர்களுக்கு கூட ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. நிதி நெருக்கடி காரணமாக வார இறுதி நாட்களில் ஐ.நா தலைமை அலுவலகம் மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது