இன்று: ஐ.நா. முதல் கூட்டத் தொடர்
அக்டோபர் 23, 1946 – ஐ.நா., சபையின் (UN council) முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் ( Newyork, US ) துவங்கியது..
1943 டிசம்பர் மாதத்தில் டெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் அதிபர் ஸ்டாலின் முதலியவர்கள் கலந்துகொண்டு உலக ஜனநாயக நாடுகளின் கூட்டுறவுக்கு அழைப்பு விடுத்தனர்.
1945 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 58 நாடுகளின் பிரதிநிதிகள் கூடினர்.
1945 ஜூன் 26ல் ஐ.நா. சபையின் சட்டதிட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் 1945 அக்டோபர் 23ம் நாள் ஐ. நா. சபையின் முதலாவது கூட்டம் துவங்கி நடை பெற்றது