இலங்கை இனப்படுகொலை: . தமிழர்களை காப்பாற்ற ஐ.நா.தவறிவிட்டதாக பான் கீ-மூன் ஒப்புதல்

Must read

download (2)

கொழும்பு:
லங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
“வடக்கு, கிழக்குப் பகுதிகளிலில் ராணுவம் குறைக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களை, அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டு கால போரின் போது ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்வதில் அந்நாட்டு அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
அவற்றைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்,” “ஐ.நா., சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட்டிருந்தால், இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, அதிக அளவிலான மனித உயிர்கள் பலியானதை தடுத்திருக்க முடியும்” என்றார்.

More articles

Latest article