பெய்ரூட்:
பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐநா  பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரிஸ் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட இரண்டு பெரிய விபத்துக்கள் நாட்டையே உலுக்கியது, இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 2500 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், மக்கள் மற்றும் லெபனான் அரசாங்கத்திற்கும், ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார் என்றும், லெபனானில் பணிபுரியும் பல ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் உட்பட காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய அவர் விரும்புவதாகவும்,  அவரின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
இந்தக் கடுமையான நேரத்தில் லெபனானை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பெய்ரூட்டில் ஏற்பட்ட இந்த பயங்கர குண்டுவெடிப்பு நகரெங்கும் உள்ள கட்டிடங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பெய்ரூடின் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.