கர்நாடகா மற்றும் கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் : ஐ நா

Must read

நியூயார்க்

ந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான ஐஎஸ், அல் கொய்தா போன்ற  இயக்கங்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.  ஆயினும் இந்த இயக்கத்தினர் பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.   ஐநா இந்த இயக்கம் குறித்து தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறது.    இது குறித்த அறிக்கை ஒன்றை ஐநா சபை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ”ஐ எஸ் மற்றும் அல்- கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், கந்தகார் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150முதல் 200 தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும்.

சமீபத்தில் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத், பழிதீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

தற்போது கிடைத்த ஓர் அறிக்கையின்படி, ஐஎஸ்எல் அமைப்பின் இந்தியக் கிளை (ஹிந்த் விலாயா) கடந்த 2019-ம் ஆண்டு மே 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் 180 முதல் 200 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  அத்துடன் இந்தியாவில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

சென்ற ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் (ஐஎஸ்எஸ், ஐஸ்ஐஎல், தாயிஷ்) இந்தியாவில் புதிய நிர்வாகப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஐஎஸ் தீவிரவாதிகளின் செய்திகளை வெளியிடும் அமாக் ஏஜென்ஸி செய்தியில் தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு மொழியில் “விலையா ஆஃப் ஹிந்த்”(இந்திய நி்ர்வாகப்பகுதி) என அவர்கள் தெரிவித்துள்ளனர்.” எனக் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article