பெய்ஜிங்:

வட கொரியா மீத ஐநா விதித்துள்ள தடைகளை பின்பற்றுவோம் என்று சீனா அறிவித்துள்ளது.

‘‘சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் வகையிலான ஐநா தீர்மானத்தை வட கொரியா சந்திக்க வேண்டியுள்ளது. சீனாவே வட கொரியாவின் ஒரே ஒரு வர்த்தகம் செய்யும் நாடு.

இப்புதிய தீர்மானம் சீனாவும், இதர உலக நாடுகளும் வட கொரியாவின் ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான மனோநிலையையே எடுத்துக் காட்டுகின்றன’’ என்று சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பன்னாட்டு அளவில் அணு ஆயுதம் பரவாமல் இருக்கவும் பிரதேச அமைதி, நிலைத்ததன்மையை பாதுகாக்க சீனா தீர்மானத்தை அமல் செய்யும். சாதாரணமான அளவில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்திற்கு இதனால் பாதிப்பு வரக்கூடாது. சாதாரண மக்களும் இதனால் பாதிக்கப்படக் கூடாது’’ என்றார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளை பாராட்டினார். வட கொரியாவுடனும் அமெரிக்கா பேசத் தயாராக உள்ளது. இதைப்பற்றி வட கொரியாவின் அதிபர் கிம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.