லாகூர்: ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு, அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் மற்றும் பல போட்டிகளில் விக்கெட் கீப்பரும்கூட.
“ஒரு போட்டியில், 2 பந்துகளை ஆடாமல் விடுவதற்காக எனக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் விலை பேசப்பட்டது மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் ஆடாமல் இருப்பதற்காகவும் என்னிடம் பேரம் பேசப்பட்டது” என்று ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுகுறித்து ஊழல் எதிர்ப்பு அமைப்பில் அவர் புகார் தெரிவித்தாரா? என்ற தகவலை அக்மல் தெரிவிக்கவில்லை. ஆனால், ஐசிசி அமைப்பின் ஊழலுக்கு எதிரான விதிமுறை 2.4.4 மற்றும் 2.4.5 இன் படி, தங்களிடம் வரும் முறைகேடுகள் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாதவர்களுக்கு, குறைந்தது 5 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.
இந்நிலையில்தான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில், உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.