உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்த போர்நிறுத்தம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து “தீவிரமான கேள்விகள்” இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

புடினின் இந்த பதில் தெளிவற்றதாக இருப்பதாகவும் இது ‘மிகவும் சூழ்ச்சிகரமானது’ என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.

“போர் நிறுத்தம் என்ற யோசனைக்கு பதிலளிக்கும் விதமாக புடினின் மிகவும் கணிக்கக்கூடிய, மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் ரஷ்யாவிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறோம்,” என்று ஜெலென்ஸ்கி நேற்றிரவு பேசியபோது கூறினார்.

முன்நிபந்தனைகள் இல்லாமல் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வாஷிங்டன் ரஷ்யாவிடம் அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் புடின் பல வழியில் தடைகளை பட்டியலிட்டார் என்று குற்றம்சாட்டினார்.

“எதையும் சிக்கலாக்கும் நிபந்தனைகளை நாங்கள் அமைக்கவில்லை. ஆனால், ரஷ்யா அதைச் செய்கிறது,” என்று ஜெலன்ஸ்கி கூறினார், மேலும், “நாங்கள் எப்போதும் கூறுவது போல, விஷயங்களை இழுத்தடிப்பது, ஆக்கப்பூர்வமாக இல்லாதது ரஷ்யா மட்டுமே” என்று கூறினார்.

அதேவேளையில், இந்த 30 நாள் போர் நிறுத்தம் உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான ஓய்வை வழங்கவே மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் இதனால் ரஷ்யாவுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கான அமெரிக்க போர் நிறுத்த யோசனையை ஏற்று புடின் பல முக்கிய விஷயங்களை விவாதிக்க பரிந்துரை