உக்ரைன்:
உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் , கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தாத அதிர்ஷ்டசாலிகள் யாரும் இல்லை. அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், எனக்கு கொரோனா தொற்ற் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நன்றாக உள்ளேன், அதிக அளவிலான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டுள்ளேன்.என்னை தனிமைப்படுத்துவதாக உறுதியளிக்கிறேன், இருப்பினும் தொடர்ந்து எனது பணிகளை செய்வேன். பெரும்பாலான மக்கள் தொற்றை வென்றது போல நானும் வென்று வருவேன்.” என கூறியுள்ளார்.
உக்ரைனில் இதுவரை 4,69,018 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் 8,565 பலியாகியுள்ளார்கள்.கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் முதல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை உலகத் தலைவர்களும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.