க்ரைன்

க்ரைன் நாட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் ரஷ்யப்படைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாடு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாகப் போர் அபாயம் சூழ்ந்துள்ளது.  ரஷ்ய நாடு உக்ரைன் மீது  எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.   உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை ரஷ்யா விலக்கிக் கொள்ளாததால் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் படைகள் தற்போது உக்ரைனை நோக்கி மேலும் நகர்ந்து எல்லையில் இருந்து 20 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன.  தவிர ராணுவ தளத்தில் ஒரு புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதால் மேலும் போர் அபாயம் நெருங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது.   உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் அழைத்து வரும் பணியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் அரசு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு டொனாஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களைத் தவிரப் பிற இடங்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அவசர நிலை 30 நாட்களில் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி ரஷ்ய உக்ரைன் போர் விரைவில் தொடங்கும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.