லண்டன்: பிரிட்டனில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, Pfizer தடுப்பு மருந்திற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளித்து, பட்டியலில் இரண்டாவது நாடாக இணைந்துள்ளது உக்ரைன்.
தற்போதைய நிலையில், உலகளவில், கொரோனா தடுப்பு மருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாவது, “வெறுமனே தடுப்பு மருந்து மட்டுமே, கொரோனாவை வெல்வதற்கான ஆயுதமாக இருக்க முடியாது. கொரோனா தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவைகளை அலட்சியம் செய்யாமல், தொடர்ச்சியாக பின்பற்றி வர வேண்டும். அதுதான் சிறந்த பயன்தரத்தக்க விஷயம்” என்றுள்ளது.
உலகிலேயே, அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஸெனகா, நோவாவாக்ஸ் மற்றும் ஸ்புட்னிக் V போன்ற தடுப்பு மருந்துகளை இந்தியா வாங்குகிறது.