பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட் வந்து சேர்ந்தார்.
அங்கு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரிட்டனில் பிரதமராக பதவி ஏற்கும் முதல் ஆசியரான ரிஷி சுனக் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக் பிரதமராக தேர்வாகி இருப்பது இந்தியர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
50 நாட்களுக்கு முன் லிஸ் ட்ரஸ்-ஸை எதிர்த்து போட்டியிட்டபோது இவருக்கு எதுவும் துணை நிற்கவில்லை என்ற நிலையில், தற்போது முன்னணி தலைவர்களிடையே எழுந்த போட்டியை பேக்பெஞ்ச்சர்ஸ் எனப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களின் ஆதரவால் முறியடித்து போட்டியின்றி தேர்ந்துக்கப்பட்டிருக்கிறார்
அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற நிலையில் தற்போது உலகின் மற்றொரு சக்தி வாய்ந்த நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பை ரிஷி சுனக் ஏற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவுக்கு நன்மை என்பதை விட உலகின் சக்தி வாய்ந்த பணக்கார நாடுகளின் முக்கிய தலைமை பொறுப்பை இந்தியர்கள் வகிப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.