சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி., பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது மாநில அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதன்பின்னரும் சில குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தாலும் ஹெச்.ஐ.வி நோயை குணப்படுத்தாமல் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்திட அதற்கான மருந்துகளை கொடுத்து வாழ்நாள் நீடிக்கப்பட்டு வந்தது.

இது ஒரு புறம் நடைபெற்றாலும் உலகம் முழுதும் ஹெச்.ஐ.வி குணப்படுத்த பெரும் ஆய்வுகள் நடைபெற்று வந்துள்ளன.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் ஸ்டெம்செல் மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.

ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகப்படுத்திய பின்னர் ஒவ்வொருநாளும் ஒவ்வொருத்துறையில் அதன் பயன்கள் பெருகிவருகின்றன. உண்மையில் ஸ்டெம்செல் நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதம்

12 ஆண்டுகளுக்கு முன்னர் மோதி ப்ரவுன் என்பவருக்கு ஜெர்மனி மருத்துவமனை ஸ்டெம்செல் மூலம் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீட்டனர்.

ஆனால் அதன்பின்னர் இன்றுவரை ஸ்டெம் செல் மூம் ஹெச்.ஐ.வி பாதிப்பிவை குறைக்கும் முயற்சி தோல்வி யில்தான் முடிந்தது.  யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்  பேராசிரியரும் வைரஸ் தொற்று பற்றி  ஆராய்ச்சி யாளருமான ரவீந்திர குப்தா ஹெச்.ஐ.வி தொற்றை லண்டனைச் சேர்ந்த ஒருவருக்கு  குணப்படுத்தியுள்ளார்.

நேச்சர் பத்திரிகையில் ஆய்வாளர்கள் ரெட்ரோவை ரஸ் மற்றும் நோய்த்தாக்கங்கள் குறித்த கருத்தரங்கில் இந்த ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர்

அதில்  “ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொருவர் தானம் செய்த எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்களை (bone-marrow transplants)  ஹெச்.ஐ.வி தொற்றுள்ள நபருக்குச் செலுத்தினோம். இதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

இச்சிகிச்சைக்குப் பிறகு  ஹெச்.ஐ.வி தொற்று உள்ளவர்  உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று காணப்பட வில்லை.  இதை நாங்கள் மருத்துவ ஆய்வு அறிக்கை யில் உறுதியானது. எலும்பு மஜ்ஜைகளை மாற்றி (Bone Marrow Transplant)  சிகிச்சை முறையில் நிறைய சிக்கல்கள் வரும் என்று கணித்திருந்தோம்.

ஏனெனில் . அனைவரின் உடலும் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காது. எனவே, மிகவும்  சிகிச்சை  அளி்க்கும்போது கவனமாக அளித்தோம். தற்போது அவரின் உடலில் தற்போது ஹெச்.ஐ.வி தொற்று இல்லை. ஆனால், இவ்வளவு சீக்கிரமாக அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. இன்னும் சில ஆண்டுகள் இவரின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்

மருத்துவ வரலாற்றில் இது ஒரு மைல்கல் எனலாம்.ஸ்டெம் செல்கள் மூலம் பழுதடைந்த சிறுநீரங்களையும், கால் மூட்டுகளையும் குணப்படுத்தலாம் என்று தொடர்ந்துவரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செலவுகள் குறைவாக…ஸ்டெம் செல்களின் பயணம் பெருகட்டும்.

-செல்வமுரளி