
கொச்சி:
தமிழக மீனவர்கள் 29 பேரை இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது.
இந்தியப்பெருங்கடலில் உள்ள சிறு தீவு டிக்கா கார்ஷியா. இந்தத் தீவு இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத் தீவின் பாதுகாப்பை இங்கிலாந்து கடற்படை பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 29 மீனவர்கள், இத்தீவுக்கு அருகே மீன்பிடித்ததாகக்கூறி, அங்கிருந்த இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது.
இந்த மீனவர்கள், கேரள மாநிலத்தின் கொச்சியில் இருந்து சென்றவர்கள்.
Patrikai.com official YouTube Channel