லண்டன்:

பிரிட்டனுக்கு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்ப்டடுள்ளது.

எகிப்து, ஜோர்டன், லெபனான், சவுதி அரேபியா, தான்சினியா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாக பிரிட்டன் வரும் விமானங்களில் லேப்டாப், டேப் லெட் கம்ப்யூட்டர்ஸ், மொபைல் போன், டிவிடி பிளேயர் ஆகியவை எடுத்துச் செல்ல, பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘‘பிரிட்டன் குடிமகன்களின் பாதுகாப்பு தான் எங்களது முன்னுரிமை’’ என்று அந்நாட்டு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மூலமான வெடி பொருட்களை கொண்டு விமானங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தொடர்ந்து பிரிட்டன் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் 8 பிரிட்டன் விமானங்களும், 6 வெளிநாட்டு விமானங்களும் பாதிக்கப்படும்.