லண்டன்: தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மற்ற நாடுகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு புதிய விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.

பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் படி, போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானார். இந்த நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ராணி உரையாற்றினார்.

அவர் தமது உரையில் போரின் ஜான்சனின் என்ஹெச்எஸ் விசா திட்டம் தொடங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் தமது உரையில் கூறி இருப்பதாவது:

தேசிய சுகாதார சேவையை முன்னேற்ற உரிய நடடிவக்கை எடுக்கப்படும். மேலும் நாட்டுக்கு தேவையான தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள் ஆகியோர் இனி இங்கிலாந்து வர இந்த அரசு உறுதி தரும் என்றார்.

நவீனமான, சிறந்த குடியேற்ற முறை விரைவில் கொண்டு வரப்படும். அதன் மூலம் வரும் தகுதிவாய்ந்த பணியார்கள், பிரிட்டனின் பொருளாதார உயரவும், மற்ற துறைகள் முன்னேறவும் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இந்த என்ஹெச்எஸ் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற மருத்துவர்கள். செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பிரிட்டனுக்குள் வரலாம். அவர்களுக்கான விசா கட்டணமும் குறைக்கப்படும்.

இந்திய மருத்துவர்கள் கடின உழைப்பாளிகள், நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்கள். நமது அமைச்சர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒன்றிணைந்து வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்கள் என்று கூறினார்.