சென்னை:  யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்,  நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில், பல்கலைக்கழக துணை வேதர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் இருப்பர் என்று தெரிவிக்கப் பட்டது. இதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று  தமிழக சட்டப்பேரவையில் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார். பேரவையின் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு, தமிழக முதல்வர் ஸ்டாலின்,  யுஜிசி விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு  பேசினார். அப்போது, கல்வியை சிதைக்கும் நோக்கில் மத்தியஅரசு செயல்பட்டு வருவதாக கூறியதுடன்,  ஏற்கனவே, நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கனவை சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.  ஆனால் ஆண்டு முழுவதும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக், மதிப்பெண் குளறுபடி என்று எல்லா முறைகேடுகளும் நடப்பதில் நம்பர் 1 தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில்,   யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.

யுஜி4சிக்கு எதிராக, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வள்ளுவர்கோட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.