டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலையங்கள் எப்போது தொடங்கும் என்று கேள்விகள் எழுந்து வந்தன.
இந் நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் முதலாமாண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அதற்கான அட்டவணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 8 முதல் 26ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 வரை கல்லூரி முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி முதல் ஆண்டுக்கான 2வது பருவத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுததாண்டு ஆகஸ்ட் வரை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.