டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ளது.

கடந்த காலங்களில் மாநிலஅரசு கல்வி வாரியத்தில் படிக்கும் மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி விடும். ஆனால், சமீப காலங்களில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் முறையற்ற நடவடிக்கைகள் மற்றும் மத்தியஅரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் உயர்கல்விக்கான காலமும் வீணாகிறது.

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை வெளியிடுவதில் தாமதப்படுத்தி வருகிறது. இதனால், மாணவர்கள் உயர்கல்வி சேருவதில் சிக்கல்எழுந்துள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்,  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கொரோனா தாக்கத்தை நீக்குவதற்காக, CBSE ஆனது i.term-l மற்றும் term-ll என இரண்டு முறை வாரியத் தேர்வை நடத்தியது உங்களுக்குத் தெரியும். இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெர்ம் தேர்வுகளின் மதிப்பீடு தொடங்கப்பட்டு, முடிவு தயாரிக்கும் செயல்முறை தொடங்கும். இரண்டு விதிமுறைகளின் செயல்திறனின் அடிப்படையில் வெயிட்டேஜை இணைப்பதன் மூலம் இறுதி முடிவு கிடைக்கும். முழு செயல்முறை முடிவை அறிவிக்க ஒரு மாத காலம் எடுக்கும்.

இந்த நிலையில்  சில பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்யத் தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது இந்த சூழ்நிலையில் (2022-2023) பட்டதாரி படிப்புகளின் கீழ், சிபிஎஸ்இ மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்க்கை இழக்கப்படுவார்கள்.

அதனால்,  CBSE தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னதாகவே பல்கலைக்கழகங்களால் கல்லூரி படிப்புக்கான கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அதை மேலும் நீட்டிக்க வேண்டும்.   அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் CBSE ஆல் 12ம் வகுப்பு ரிசல்ட் அறிவித்த பிறகு, பட்டதாரி சேர்க்கை செயல்முறையின் கடைசி தேதியை நிர்ணயிக்க வேண்டும். சிபிஎஸ்இ  மாணவர்கள் பட்டதாரி படிப்புகளில் சேர்வதற்கு போதுமான நேரத்தை வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.