டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெளிவுபடுத்தி உள்ள தேசிய தேர்வு முகமை ஜூலை 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்து உள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வை (NEET UG 2022) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 20 ஆம் தேதி (ஜுன்) முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து, நீட் நுழைவு தேர்வு நேர்வுக்கான விண்ணப்படிவத்தில் திருத்தம் செய்வதற்கான செயல்முறை நேற்று (27ந்தேதி) முடிவடைந்தது.
இந்த நிலையில், இளங்கலை மருத்துவப்படிப்புக்கான நுழைவு தேர்வு திட்டமிட்டபடி, ஜூலை 17ந்தேதி நடைபெறும் என தெளிவுபடுத்தி உள்ளது. NEET தேர்வை தள்ளிவைக்க நாடு முழுவதும் கோரிக்கை எழுந்த நிலையில் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. NEET – UG தேர்வை எந்த காரணத்தைக் கொண்டும் தள்ளிவைக்க முடியாது எனவும் கூறப்பட்டிருக்கிறது.