நெட்டிசன்:
Sidharthan Kaliaperumal is in Chidambaram முகநூல் பதிவு


டலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், நுண்கலை ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெறும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் தொழில் சார்ந்த படிப்புகளான வேளாண்துறை (Agriculture), தொழில்நுட்பம் (Engineering), சட்டம் (Law), மருத்துவ அறிவியல் (Medical Science), ஆகியவைகளுடன் விரிவுபடுத்தப்பட்டது.
இவற்றுள் தொழில்சார் (Professional) பிரிவின்கீழ் தினசரி வகுப்பு (Regular Mode), சட்டப்படிப்பு (Law) 1979ஆம் ஆண்டு பார் கவுன்சில் அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்டது. அதனைக் கொண்டு தொலைதூரக் கல்வி நிலையம் மூலம் சட்ட பட்டய, பட்டப் படிப்பு, முதுநிலை சட்டப் படிப்பு தொடங்கப் பெற்று இன்றளவும் நடைபெற்று வருகிறது.
தொலைதூர கல்வி மூலம் பயிலக்கூடிய சட்டப் படிப்புகள் சில பதவிகளில் கூடுதல் கல்வித் தகுதியாக கருதி முன்னுரிமையும், சில பதவிகளில் பதவி உயர்விற்கும், சில சமயங்களில் பணப்பயன் அளிக்க கூடியவையாகவும் இருக்கும்.
ஆனால் தினசரி வகுப்பு (Regular Mode ), சட்டப் படிப்பின் வாயிலாக இளநிலை (U.G), சட்டப் பட்டப் படிப்பு படித்தால் தான் பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராகப் பணியாற்ற இயலும். ஆகவே தினசரி வகுப்பு (Regular Mode) சட்டப் பட்டப் படிப்பு அவசியமான ஒன்றாகும்.
மேலே சொல்லப்பட்ட தொழில்சார்ந்த படிப்புகளில் இன்ஜினியரிங், வேளாண் துறை, மருத்துவ அறிவியல் ஆகியவைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தினசரி வகுப்பு (Regular Mode) சட்டப் பட்டப் படிப்பு மட்டும் சில ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில் பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது.  அதனை மீண்டும் துவங்க வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்கள் பலர் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாகவும், அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும், நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தற்போது சட்டப்படிப்பில் தினசரி (Regular), முதுகலை பட்டப்படிப்பு நடத்துவதற்கும் அனுமதி உள்ளது. மேலும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
தற்போது துணைவேந்தராக பதவி வகித்துவரும் மதிப்பிற்குரிய முனைவர் திரு.T. முருகேசன் அவர்கள் துணைவேந்தராக பதவி யேற்ற நேரத்திலும், பின்னர் பல சமயங்களிலும் சட்டக்கல்லூரி மீண்டும் துவங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தமை நினைவு கொள்ளத்தக்கது. சொல்லிய வண்ணம் செயலாற்றுவார் என நம்பிக்கையுடன் அனைவரும் உள்ளனர்.
கல்வியாளர்களும், மாணவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட தினசரி (Regular Mode) சட்டக்கல்லூரி மீண்டும் துவங்கும் என ஆவலோடு, நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் உள்ளனர். தேவையான அனைத்து உள்கட்டமைப்பு (Infrastructure), அடிப்படை வசதிகளும், சிறந்த நூலகமும் உள்ளதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
மத்திய அரசு ஆன் லைன் மூலம் பல்கலைக்கழகங்கள் கல்வி பயிற்றுவிக்க அனுமதி அளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ஆகவே காலதாமதமின்றி உடனடியாக நடப்பு கல்வியாண்டில் (2020 – 21) தினசரி வகுப்பு (Regular Mode) சட்டக்கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் துவங்கும் வகையில் விரைவாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு, கோரிக்கை மற்றும் காலத்தின் கட்டாயமாகும்.