சுவிட்சர்லாந்து:

ரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் மே மாதம் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை யுஇஎஃப்ஏ தள்ளி வைத்துள்ளது.

கூடுதலாக, பெண்கள் சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி மற்றும் ஐரோப்பா லீக் இறுதி போட்டி ஆகிய போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஇஎஃப்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வரும் மே மாதம் நடக்கவிருந்த யுஇஎஃப்ஏ பெண்கள் சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி, ஐரோப்பா லீக் இறுதி போட்டி, யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி போன்ற போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளை எந்த தேதியில் நடக்கு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஐரோப்பியா கால்பந்து அமைப்புடன், யுஇஎஃப்ஏ தலைவர் அலெக்சண்டர் செஃபெரின் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.