சென்னை
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாதியில்லா சமுதாயம் அமைப்போம் எனப் பதிவிட்டுல்லார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,
”பெயர்களில் இருந்த சாதி ஒட்டினை ஒழித்த திராவிட இயக்கத்தின் வழியில், ஊர்களில் இருக்கும் ‘காலனி’ எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது நம் திராவிட மாடல் அரசு.
முதல்வர் மு.க .ஸ்டாலினின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்கிறோம்.
ஈராயிரம் ஆண்டுகள் இறுகிப்போய் இருக்கும் சாதியை வீழ்த்துவதற்கான பயணத்தில் முக்கிய மைல்கல் இது. சமத்துவம் தழைக்க – சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்.”
எனப் பதிவிட்டுள்ளார் .
Patrikai.com official YouTube Channel