ஈரோடு
அதிமுகவைத் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். அதையொட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கத் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டுக்கு வந்ஹ்டார்/ அவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய உதயநிதி,
“நான் உங்களை நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன். நீங்கள் எங்களுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளீர்கள். இங்கு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உங்களின் வெற்றி ஆகும்.
நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி நான் டில்லி சென்று பிரதமரிடம் கேட்டு வந்தேன். அதே வேளையில் எடப்பாடி கோஷ்டி கட்சி பஞ்சாயத்திற்காக டில்லி சென்றிருந்தார்கள்.
அவர்கள் டில்லி செல்வதற்கு முன்பு அண்ணாமலை குறித்து கேள்வி கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு டெல்லி சந்திப்பிற்குப் பிறகு அண்ணாமலையைக் கட்டிப்பிடித்துப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளதா?
மோடியின் நண்பர் அதானி எப்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்தார் என ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி பதவியைப் பறித்துவிட்டனர்.”
எனப் பேசி உள்ளார்.ம்