மிஸ்கின் இயக்கத்தில் உருவான சைக்கோ படத்தில் பார்வையற்ற கதாநாயகனாக நடித்திருந்தார் உதயநிதி .

பலரது பாராட்டுகளை பெற்ற உதயநிதி லயோலா கல்லூரி மாணவர்களுள் ஒருவரின் குரலில் உருகிப் போனதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லாயோ கல்லூரியில் பி ஏ ஆங்கில இலக்கியம் படித்துவரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களில் ஒருவரான இளையசெல்வம் என்பவர், உன்ன நெனச்சு நெனச்சு பாடலை பாடிக் காட்டியுள்ளார். அவர் பாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உதய்.

நாங்கள் லயோலா மாணவர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். ‘சைக்கோ’ பார்த்தோம். உங்களை சந்திக்கவேண்டும்’ என்றனர். சந்தித்தேன். பி.ஏ ஆங்கில இலக்கிய மாணவர் இளையசெல்வம், ‘உன்ன நெனச்சுநெனச்சு உருகிப்போனேன்’ பாடினார். உண்மையில் உருகித்தான் போனேன். நன்றி ராஜா சார் என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]