கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார் .

ஊரடங்கு உத்தரவால் ஷூட்டிங் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த தொகையை அவர் சின்னத்திரை நடிகர் சங்கத்திடம் அளித்தார்.