மும்பை

காராஷ்டிர ஆளுநர் அம்மாநில மண்ணின் மைந்தர்களை அவமதித்துள்ளதாக உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்/

மகாராஷ்டிர மாநில ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி பதவி வகித்து வருகிறார்.  அவர் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய போது தெரிவித்த கருத்துக்கள் அம்மாநிலத்தில் கடும் சர்ச்சையை எற்படுத்தி உள்ளது.  அவருடைய பேச்சுக்கள் மாநில மக்களை அவமதிப்பதாக உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

அவர் அந்நிகழ்வில் பேசியபோது, “மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானிகள் வெளியேறினால் இம்மாநிலத்தில் பணமே இருக்காது.  குறிப்பாக மும்பை நகர் மற்றும் தானே முழுவதும் முடங்கி இந்தியாவின் பொருளாதார தலைநகராக மும்பை இருக்க முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிர ஆளுநர் தன தனது பேச்சு மூலம் இந்துக்களை பிளவு படுத்த் முயல்கிறார்.  ஆளுநரின் பேச்சு மராட்டிய மண்ணின் மைந்தர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது.  அவரை வீட்டுக்கு அனுப்புவதா இல்லை சிறைக்கு அனுப்புவதா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.