மோடியுடன் உத்தவ் பேச்சு..  ஒரே நாளில்  திடீர் திருப்பம்..

மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே,  அம்மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை.

எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட அவகாசம் இல்லாததால் வரும் 28 ஆம் தேதிக்குள் அவர் எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.

அங்கு 9 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்வதற்குத் தேர்தல் நடக்க இருந்தது. ஆனால்

கொரோனா பாதிப்பால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரிக்கு உள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தும் அதனை ஆளுநர் கண்டு கொள்ளவில்லை.

பதவியில் நீடிக்கும் கடைசி முயற்சியாக, பிரதமர் மோடியுடன், உத்தவ் தாக்கரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

’’முதல்வர் பதவியில் நீடிக்க உதவுங்கள்’’ என்று உத்தவ் உருக, மோடி, ‘’ஆகட்டும் பார்க்கலாம்’’ என்று சொல்லி வைத்தார்.

பழைய கூட்டாளி என்ற பாசத்தில், உத்தவ் தாக்கரேவுக்கு உதவ மோடி முன் வந்துள்ளார்.

எப்படி?

பிரதமருடன் உத்தவ் பேசிய 24 மணி நேரத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில் காட்சிகள் மாறின.

‘’மகாராஷ்டிர மாநிலத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள எம்.எல்.சி. தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று ஆளுநர் கோஷ்யாரி, தேர்தல் ஆணையத்துக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

‘’கொரோனா பாதிப்பின் போது விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனவே , மகாராஷ்டிர மாநிலத்தில் எம்.எல்.சி. தேர்தலை நடத்துவது சாத்தியமே’’ என்று ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அங்கு தேர்தல் நடக்கும்.

உத்தவ் எம்.எல்.சி. ஆவார்

முதல்வர் பொறுப்பில் நீடிப்பார்.