டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (உபா) தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிஎப்ஐ மீதான உள்துறை அமைச்சகம் விதித்த தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது.
நாடு முழுவதும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு, மக்கள் விரோத நடவடிக்கைளை மேற்கொண்டு வந்த பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கட்சிக்கு மத்தியஅரசு கடந்த 2022ம் ஆண்டு அதிரடியாக தடை விதித்தது. அதன்படி 2022ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம், உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்து அறிவித்தது. அதைத்தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்த அமைப்பினர் ஈடுபட்டதாக எழுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த பலரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அந்த கட்சி பல இடங்களில் போராட்டம் நடத்தியது. அதை ஒடுக்கிய காவல்துறையினர், நாடுமுழுவதும் இயங்கி வந்த பிஎஃப் அலுவலகங்களுக்கு சீல் வைத்தது. தற்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில்,பிஎஃப்ஐ மீதான தடையை எதிர்த்து தீர்பாயத்தில் முறையிட்டது. இதுகுறித்து ஆராய நீதிபதி தினேஷ் குமார் சர்மா தலைமையிலான தீர்ப்பாயம் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது. அந்த தீர்ப்பாயம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த பிஎப்ஐ அமைப்பின் செயல்பாடுகள், அவர்களது தரப்பு வாதங்களை கேட்டறிந்து வந்தது. அதன்படி நேற்று தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.
அதில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட பிஎப்ஐ மீது தடை சரிதான் உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.