துபாய்
அமீரகத்தின் மிக இளைய கொரோனா நோயாளியான 9 வயதான பிலிப்பைன்ஸ் சிறுவன் ஹெர்வி இமானுவேல் மாகோஸ் குணம் அடைந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிறுவன் ஹெர்வி இமானுவேல் மாகோஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியபட்டது. இவருக்கு வயது 9 ஆகிறது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி அன்று இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 23 அன்று இவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று இவர் தனது ஒன்பதாவது பிறந்த தினத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொண்டாடினார். அவருக்கு உடல் நிலை தேறி ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
நேற்று ஹெர்வி இமானுவேல் மாகோஸ் முழுமையாகக் குணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அமீரக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அன்வர் கர்காஷ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள வீடியோவில் சிறுவன் வார்டில் இருந்து நடந்து வரும் காட்சி வெளியாகி உள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=mqh0Gc5BkzM]