துபாய்
ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை விதிகளில் மாபெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பல வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விசா பெற்று அங்குத் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். இதைத் தவிரப் பல வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் ஐக்கிய அரபு அமீரக அரசு குடியுரிமை சட்டத்தில் மாபெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. இது வரலாற்றில் அதிசயமானது எனப் பல ஆர்வலர்கள் அரசைப் புகழ்ந்து வருகின்றனர்.
அதன்படி அரபு அமீரக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், மற்றும் திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குக் குடியுரிமை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.