புதுடெல்லி:
ந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட ஐக்கியஅரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதராக செயல்பட்டது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் இராணுவ பதற்றத்தை அமைதிப்படுத்தும் புதிய முயற்சியாக இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகள் ஜனவரி மாதம் துபாயில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த புதன்கிழமை ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஹூவர் நிறுவனத்துடன் மெய்நிகர் கலந்துரையாடலில் தூதர் யூசெப் அல் ஒடாய்பா, இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட ஐக்கியஅரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதராக செயல்பட்டது என்று தெரிவித்துள்ளார்.