அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஐக்கிய அரசு அமீரகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், பொது சேவை நிறுவன ஊழியர்கள் 7 நாட்களுக்கு ஒரு முறை பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் முழுநேரம் என்ற அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சோதனை கட்டாயமாகும்.
கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து உள்ளது. முன்னதாக, அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகளின் ஊழியர்கள் 7 நாட்களுக்கு ஒரு முறை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அரசாங்க கூட்டங்கள் உள்ளிட்ட அமர்வுகளில் கலந்து கொள்ள உள்ளவர்கள், வல்லுநர்கள் நிகழ்வு நடக்கும் 3 நாட்களுக்கு முன்னதாக பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.