வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் 1லட்சத்துக்கு 20ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை 14 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
200க்கும் மேற்பட்டுள்ள உலக நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் தொற்று பரவலை தடுக்க டிரம்ப் நிர்வாகம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால், அங்கு தொற்று பரவல் தொடக்கம் முதலே அதிகரித்து காணப்படுகிறது. அதுபோல உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சம் பேர் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதையடுத்து அதிபர் தேர்தலை கருத்தில்கொண்டு, தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தினசரி 50ஆயிரம் முதல் 60ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அங்கு மீண்டும் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது. ‘ கடந்த சில நாட்களாக தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில், மீண்டும் நாளொன்றுக்கு ஒரு லட்சத்தை தொட்டது.
தற்போதைய நிலையில், அமெரிக்காவில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,919,522 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2.40,953 பேர் உயிரிழந்துள்ளனர். 6,340,472 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 53,322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 1லட்சத்து 20ஆயிரதுது 048 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளோர் எண்ணிக்கை 14 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அந்தநாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர தேர்தல் நடவடிக்கை காரணமாகவும், டிரம்ப் அரசின் முறையான நடடிவக்கை இல்லாததாலும் தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.