வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்காடிவில் வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3ந்தேதி) அங்கு ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்கம் வேகம் எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது.
சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருவதுடன், உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டு வருகிறது. லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியும் இறுதிக்கட்டத்தை தொடங்கி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. இதனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் பொதுமுடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.கடந்த செப்டம் மாதம் வாங்கில் ஓரளவு குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் உச்சம்பெறத் தொடங்கி உள்ளது. அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தொற்று பரவலும் கடந்த 15 நாட்களாக மீண்டும் உயர்ந்து வந்த நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 1லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.58 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.32 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதுபோல தற்போதைய நிலையில், 11.46 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டதாக அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வந்தனர். அதேவேளையில், அதிபர் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என்று டிரம்பின் முயற்சி மேற்கொண்டார். இதன்மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியை எளிதாக ஈட்டி விடலாம் என கனவு கண்டார். ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறாத நிலையில், தேர்தல் முடிவும் அவருக்கு எதிராகவே இருக்கும் என நம்பப்படுகிறது.