பெய்ரத்:

அமெரிக்காவின் ஆதரவுடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து சிரியாவில் சண்டையிட்டு வரும் குர்தீஷ் படையினர் ராக்காவில் உள்ள நகர மருத்துவமனையை கைப்பற்றியுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளை அங் குள்ள உள்ளூர் விளையாட்டரங்கத்திற்கு முடங்கியுள்ளனர்.

ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மருத்துவமனை, அவர்களின் கட்டுப்பாட்டு மையமாகவும் செயல்பட்டு வந்தது. இது குறித்து சிரியன் ஜனநாயக படை செய்தி தொடர்பாளர் முஸபா பாலி கூறுகையில், ‘‘ மருத்துவமனையில் நடந்த சண்டையில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதும் சரணடைய மறுத்த பயங்கரவாதிகளுடன் சண்டை தொடர்ந்து நடக்கிறது’’ என்றார்.

விளையாட்டரங்கத்தில் உள்ள சிறிய பயங்கரவாத குழுவினருவடன் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சண்டை நீண்ட நேரம் நீடிக்க வாய்ப்பு இல்லை. இன்று இரவுக்குள் இது முடிவுக்கு வந்துவிடும் என்று குர்தீஷ் மூத்த கமாண்டர் ஒருவர் தெரிவித்தார்.

விளையாட்டரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. விளையாட்டரங்க வளாகத்தில் கன்னி வெடிகளை பயங்கராவதிகள் பதுக்கி வைத்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் துருப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், அந்த விளையாட்டரங்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆயுத கிடங்காக இருந்து வந்துள்ளது. அதோடு, சிறை வளாகமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவமனையை கைப்பற்றியதன் மூலம் நகரில் பறந்து வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி இறக்கப்பட்டுள்ளது.