நாவில் பேசிய வடகொரிய தூதர், அணுஆயுதப்போர் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது ஐ.நா. உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில்   அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், சிரியா, சூடான், ஈராக், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட வெளிநாட்டினர்  அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணமாக வடகொரியா, வெனிசுலா, சேட், ஈரான், சோமாலிய, சிரியா, உட்பட 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வடகொரியா நடத்தி வரும் அணுஏவுகணை சோதனை உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா பல அதிரடி கருத்துக்களையும் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் துணைத் தூதர் கிம் இன் யாங், பேசிம்போது, ‘எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்’ என்று  தெரிவித்துள்ளார்.

‘1970-ம் ஆண்டுக்குப்பிறகு அமெரிக்காவால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நாடுளில் வடகொரியாவும் ஒன்று. அதன் காரணமாகவே, தற்காப்புக்காக அணு ஆயுதங்களை வடகொரியா உருக்கி உள்ளது. அதற்கு அனைத்து உரிமைகளும் எங்களுக்கு உளளன.

தற்போது, கொரிய தீபகற்பத்தில் பிரச்னை மிகவும் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக  எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் மூள்வதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்ல என்று கூறினார்.

கொரிய துணைத்தூதரின் இந்த பேச்சு  உலகம் நாடுகளிடையே  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டிரம்ப் அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால்அடையாளமே தெரியாத அளவுக்கு மிக கடுமையாக பதிலடியை நாங்கள் பரிசாகதருவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியாவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.