சென்னை:
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், மைசூரில் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் பல ஆண்டுகளாக இருந்த தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை சென்னைக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இந்த மைப்படிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு தொடர் முயற்சியின் காரணமாக மைப்படிகள் தற்போது இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
Patrikai.com official YouTube Channel