
‘நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்வேதா சாபு சிரில் கலை இயக்கம் செய்கிறார்.
விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிப்பதாக காதலர் தினத்தன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18-ம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த ட்விட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாடலின் மியூசிக் வீடியோ ஷூட்டிங் நடைபெறுவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]SURPRISE 🤩 GET READY FOR ANOTHER MV TREAT! @VigneshShivN will be shooting a promotional video song for #TwoTwoTwo second single from #KVRK featuring Rockstar @anirudhofficial today! 💥
Song releases on September 18th🥳@SonyMusicSouth @Rowdy_Pictures @7screenstudio pic.twitter.com/9xnyGMHmSx
— Anirudh FP (@Anirudh_FP) September 13, 2021