பம்பா:

பரிமலை  அய்யப்பன் கோவில் இன்றுறு இரண்டு பெண்கள் ஆண்கள் வேடமிட்டு  தரிசனம் செய்ய முயன்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  இரண்டு பெண்களையும் காவல் துறை யினர் திருப்பி அழைத்துச் சென்றுள்ளனர்.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு காரணமாகவும், மாநில அரசின் நடவடிக்கை காரணமாகவும், அய்யப்ப பக்தர்களின் எதிர்ப்பை மீறி  சபரிமலைக்கு பெண்கள் வர முயற்சித்து வருவது அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே 2 பெண்கள் அரசு பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேலும் 2 பெண்கள் ஆண்கள் வேடமிட்டு சபரிமலைக்கு வர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கேரளா மாநிலத்தின் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் மற்றும் ஷானிலா ஆகிய இரு இளம் பெண்கள் ஆண்கள் போல வேடமிட்டு  இன்று சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால், அந்த பெண்களை நீலமலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் இரு பெண்களையும்  பாதுகாப்புடன் பம்பைக்கு திரும்பி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில்  மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30ந்தேதி நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மகர விளக்கு பூஜை நடைபெற்ற நிலையில், 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.