பெங்களூரு:
திங்கட்கிழமை (20ந்தேதி) முதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில், கொரோனா தொற்று வீரியம் குறைந்த பகுதிகளில், வரும் 20ந்தேதி முதல் ஊரடங்கை சில சிபந்தனை களுடன் தளர்த்தலாம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது,
வரும் 20ந்தேதி முதல் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் கிடையாது.
மென்பொருள் மற்றும்  தொழில்நுட்பத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களை கொண்டு பணிகளைத் தொடங்கலாம்.
முதியவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது
மதுபானக்கடைகள் 3ந்தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும், அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
வெளியே செல்லும் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயம்.
சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.