டெல்லி:

பசிபிக் ஆசியாவில் லஞ்சம் அதிகளவில் நடைமுறையில் இருக்கிறது என்று ஆய்வு மூலம் தெரியவந்தள்ளது. 3ல் 2 பங்கு இ ந்தியர்கள் அரசுப் பணிகளை செய்து முடிக்க ‘டீ பணம்’ உள்பட பல வடிவங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச வெளிப்படைதன்மைக்கான ஊழல் எதிர்ப்பு உரிமைகள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 69 சதவீத இ ந்தியர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும், இதை தொடர்ந்து வியட்னாமில் 65 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மிகவும் குறைவாக சீனாவில் 26 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஜப்பானில் மிக குறை ந்த அளவில் 0.2 சதவீதம் பேரும், தென் கொரியாவில் 3 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்து தான் காரியம் சாதிக்க வேண்டியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் லஞ்சத்தின் வளர்ச்சி சீனாவில் 73 சதவீதமும், இந்தியா 41 சதவீதத்துடன் 7வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான், மியான்மர். இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியாவில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. ஆசியா&பசிப்பி பகுதியில் உள்ள 16 நாடுகளில் 22 ஆயிரம் பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கெ £ள்ளப்பட்டது. சுமார் 900 மில்லியன் பேர் கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

அரசுப் பணிகளில் லஞ்சம் பெறுவதில் காவல்துறை 38 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆய்வில், காவல்துறை, நீதிபதி அல்லது நீதிமன்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அல்லது அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் ஆவணங்கள் பெறவோ அல்லது சேவையை பெறவோ எந்த வகையிலான லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்ற வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டது.

சர்வதேச வெளிப்படைத்தன்மை தலைவர் ஜோஸ் யுகாஸ் கூறுகையில்,‘‘ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக போலி வாக்குறுதிகள் கொடுப்பதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அரசு பணிகளை மேற்கொள்ள மில்லியன் கணக்கான மக்கள் லஞ்சம் கொடுக்க நிர்ப்பந்த செய்யப்படுகிறார்கள். இதில் ஏழைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்’’ என்றார்.

‘‘காவல்துறையினரும், அரசாங்கமும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை கடைபிடிக்க அனைத்து தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். சரியான முறையில் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றால் ஊழலை விரட்ட முடியாது. லஞ்சம் என்பது சிறிய குற்றமல்ல. உணவை பதுக்கும். கல்வியை மறுக்கும். முழு மருத்துவ வசதி கிடைக்கவிடாமல் செய்துவிடும். சொல்லப்போனால் இது ஆளையே கொன்றுவிட கூடியதாகும்’’ என்று ஜோஸ் யுகாஸ் தெரிவித்துள்ளார்.