டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று இந்திய தேர்தல் ஆணையர்களாக பதவி ஏற்றனர்.
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அவரது பதவி காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், அவரது திடீர் ராஜினாமா பேசும் பொருளாக மாறியது. ஏற்கனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதால், 3 ஆணையர்களை கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு ஆணையர்கள் பதவி காலிகாக இருந்தது. இதனால், அவர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மத்தியஅரசின் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தின்படி, காலியாக உள்ள இரு இடங்களுக்கான தேர்வு செய்யும் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் பிப்ரவரி 15ந்தேதி அன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இச்த கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகிய இருவரும் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களாக பதவி ஏற்றனர்.
இன்று பதவி ஏற்றுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களும், 1988 பேட்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
சுக்பீர் சிங் சாந்து உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளராக பணியாற்றிவர், மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தவர்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மக்களவை தலைவரான ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, “தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையர் தற்போது நியமிக்கப்பட வேண்டுமெனக் கோரிய வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருவதற்கு முன்பே அரசாங்கம் தேர்தல் ஆணையர்களை நியமித்து விட்டது. பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையர் தற்போது நியமிக்கப்பட வேண்டுமெனக் கோரிய வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருவதற்கு முன்பே அரசாங்கம் தேர்தல் ஆணையர்களை நியமித்து விட்டது. பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்” என x சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.