சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த இருவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அக்டோபர் 17ந்தேதி அன்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாட்சா தலைமையிலான ஆணவக் கொலை தடுப்பு ஆணையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தமிழ்நாடு அரசால் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்சா தலைமையிலான ஆணவக் கொலை தடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ஆணையத்திற்கு டாக்டர் வி.பழனிவேல்குமார் அய்.ஏ.எஸ். (ஓய்வு), எஸ்.இராமநாதன் அய்.பி.எஸ். (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.