சென்னை: மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அதிரடி காட்டி பரபரப்பை ஏற்படுத்திய  அமைச்சரும், கல்வித்துறையும், ஆசிரியர்களிடம் பணிந்துள்ளது. அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளும் மீண்டும் சென்னைக்கே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கல்வித்துறை குறித்து, ஆட்சியாளர்களின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும், ஆசிரியர் சங்கங்களின் மிரட்டல் காரண மாகவும், பரபரப்பாக பேசப்பட்ட மகாவிஷ்ணு விவகாரம் புஷ்வானமாக போயுள்ளது.  பள்ளிக்கல்வித்துறையினரின் நடவடிக்கையும் வெத்து வேட்டானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் மோட்டிவேஷனல் ஸ்பிச் கொடுக்க பள்ளிக்கல்வித்துறை  அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதன்பேரிலேயே மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பல பேச்சார்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும்  வகையில் சிறப்பு பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு பேசி வந்தனர். இதற்கு ஒவ்வொரு மாவட்ட டிஇஒ, ஏஇஓ மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்பேரில்தான்,  பள்ளி தலைமையாசிரியர்கள் எந்த சிறப்பாசிரியர்களைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு  மோடிவேஷனல் ஸ்பீச்சுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான்,  சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பரம்பொருள் பவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு பேசியது சர்ச்சைக்குள்ளானது.  அவர் கர்மா குறித்து பேசியதை ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்த நிலையில், இந்த விவகாரத்தை சிலர் ஊதி பெரிதாக்கிய நிலையில், அமைச்சர் அன்பில் மகேசும், தான் அமர்ந்திருக்கும் பதவிக்கு மதிப்பு கொடுத்து பேசாமல், இது என் ஏரியா என ரவுடிபோல பேசியதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இந்த பேச்சுக்கு அனுமதி கொடுத்த பள்ளிக்கல்வித்துறையும்  அதிரடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி, சர்ச்சைக்குரிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மட்டுமே இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.  அதன்படி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதேபோன்று சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகள் கடந்த 6ம் தேதி பிறப்பிக்கப்பட்டன.

இந்த  விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,  இதையடுத்து மகாவிஷ்ணுடிவ தமிழ்நாடு அரசு கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளது. தான் ஏதும் தப்பாக பேசவில்லை. அதனால்,  ஜாமின் கோரமாட்டேன் என பிடிவாதமாக மகாவிஷ்ணு சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில், மகாவிஷ்ணு  விவகாரத்தை சர்ச்சைக்குரிய வகையில் மாற்றிய ஆசரியர் சங்கர் ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதும், திட்டமிட்டே சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் பள்ளியில் யார் பேசுகிறார்கள்,  எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பது குறித்த தலைமை ஆசிரியர்கள் ஏஇஓ, டிஇஓவிடம் அனுமதி பெற்றதாகவும் கூறப்பட்டது.  இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர்கள் மட்டும்தான் தண்டனை பெற வேண்டுமா, இதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை கிடையாதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதனால்  தலைமை ஆசிரியர்கள் பணி மாற்றம்  பள்ளிக்கல்வித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்வித்துறை சங்கத்தினரும் போர்க்கொடி தூக்கினர். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட  இரண்டு தலைமையாசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் மீண்டும் சென்னைக்கு மாறுதல் பெற தீவிர முயற்சி எடுத்தனர்.  தங்களை மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யாவிட்டால் விடுப்பு எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தை நாடப்போவதாக தகவல்கள் பரவின.

மேலும்,  இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் இயக்கங்களும் கல்வித்துறை அமைச்சர் உள்பட உயர் அதிகாரிகளை சந்தித்து, அவர்களை மீண்டும் சென்னைகே இடமாற்றம் செய்ய  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், இரண்டு தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவையும் ரத்து செய்து, மீண்டும் சென்னைக்கு பணியிடமாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழரசி, விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி , அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் டேவிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சண்முகசுந்தரம், அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் சங்கங்களின் தொடர்  மிரட்டல் மற்றும் பள்ளிக்கல்வித்துறை  குறித்து  முழுமையாக அறியாத அமைச்சரின் செயல்பாடுகள் காரண மாக  பள்ளிக்கல்வித்துறையின்  அதிரடி உத்தரவு வாபஸ் பெறப்பட்டு, அவர்களுக்கு சென்னையிலேயே பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.