புவனேஸ்வர்: ஒடிசாவில் கிராமம் ஒன்றில் ஜேசிபி இயந்திரத்திலிருந்து 2  பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன.

ஒடிசாவில் உள்ள பல்லிகுமுலு என்ற கிராமத்தில் ஜேசிபி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் நேற்று மீட்கப்பட்டது. ஒரு நீர்த்தேக்க தளத்தில் அழகுபடுத்தும் பணியின் போது அவை ஜேசிபி இயந்திரத்தில் புகுந்து ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

7 அடி நீளம் கொண்ட முதல் மலைப்பாம்பு ஜேசிபி இயந்திரத்தின் மேல்பகுதியில் இருந்ததால் மிக எளிதாக மீட்கப்பட்டது. ஆனால், இயந்திரத்தின் உள்ளே இருந்த 2வது பாம்பை 4 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த பாம்பு 11 அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் 2 பாம்புகளும் அடர்ந்த் வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு போய் விடப்பட்டன என்றும் அவர்கள் கூறினர்.