டெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக, உலக நாடுகளுக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட தால் வெளிநாட்டில் ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். துபாயில் சிக்கிய தமிழர்களை தாயகம் அழைத்துவர சென்ற 2 சிறப்பு விமானம் இன்று இரவு சென்னை வந்தடைகிறது…

அவர்களை அழைத்து வரும் பணி 7 நேற்று முதன் மீண்டும் தொடங்கி உள்ளது.வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் இந்திய விமானப் போக்குவரத்து துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.  இதற்காக ஒவ்வொரு மாநிலங்களும் , வெளிநாட்டில்  இருந்து தாயகம் திரும்புபவர்களின் வசதிக்காக  ஆன்லைன் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று முதல் பல நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அந்தந்த நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் முயற்சியை இந்திய அரசு தொடங்கி யுள்ளது.
இந்த நிலையில்,  இன்று  சென்னையில் இருந்து துபாய்க்கு 2 சிறப்பு விமானங்கள் சென்றுள்ளது. முதல்  விமானம் அங்குள்ள இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பிற்பகல் 2.45 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறது. இன்று இரவு 8.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறது.
மற்றொரு விமானம் அங்கு இரவு 7 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.